நெல்’ ஜெயராமன் முழுமையாக  நலம்பெற வேண்டும்: மதிமுக பொதுசெயலாளர் வைகோ

‘சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நெல்’ ஜெயராமன் முழுமையாக  நலம்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

         சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இயற்கை வேளாண் காவலர் ‘நெல்’ ஜெயராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து வைகோ கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் வேளாண்மை செய்து வந்த 174 வகை பாரம்பரிய நெற்பயிரை அழிவிலிருந்து மீட்க, போராடி வெற்றி கண்டதற்காக ஜெயராமனுக்கு ‘நெல்’ ஜெயராமன் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பட்டம் சூட்டி பாராட்டியதை குறிப்பிட்டார்.

காவிரி தீர விவசாயிகளைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கவும் அறப்போராட்டங்களில் பங்கேற்ற போராளிதான் நெல் ஜெயராமன் என அவர் கூறினார். கடுமையான நோயின் பிடியில் சிக்கித் தவித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது அண்மைக் காலம் வரை ஒரு பக்கம் சிகிச்சை எடுத்துக்கொண்டு விவசாயிகளைத் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்‘நெல்’ ஜெயராமனை தான் சந்தித்துப் பேசியபோது, மனிதாபிமானத்தோடு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிற மருத்துவர்களை குறிப்பிட்டு நன்றி கூறியதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக சித்த வைத்தியச் செம்மல் மருத்துவர் சிவராமன் தனது உடல்நலனைப் பாதுகாக்க பல வகையிலும் உதவி செய்ததை நெல் ஜெயராமன் குறிப்பிட்டதாகவும், அவர் முழுமையான நலம்பெற வேண்டும் என்ற உணர்வோடு அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்

Related Posts