நேபாளத்தில் முக்திநாத் கோவிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

நேபாள  பிரதமர் கே.பி.சர்மாஒலியை  பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது,இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

நேபாளம் : மே-12

இரண்டு நாட்கள்   அரசுமுறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் இணைந்து ஜனக்பூர்- அயோத்தி இடையே நேரடி பேருந்துச் சேவையை தொடங்கிவைத்தார். ராமாயண அடிப்படையிலான ஆன்மீக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சேவை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். மோடியின் வருகையையொட்டி கோயில் வளாகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இதையடுத்து காத்மாண்டு நகரில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Posts