நேற்று சற்றே குறைந்த தங்க விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 192 ரூபாய் உயர்ந்து, 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 24 ரூபாய் உயர்ந்து, மூவாயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 100 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts