நைஜீரியாவில் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் பலி

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியா : ஜூன்-29

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கி, தீப்பிடித்து எரிந்தது. லாரியில் பற்றிய தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related Posts