நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு

நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

நைஜீரியா : மே-02

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் அவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் முபி நகரில் உள்ள மசூதி அருகே போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Related Posts