நைஜீரியாவில் தேவாலயத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி

Want create site? Find Free WordPress Themes and plugins.

நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நைஜீரியா : ஏப்ரல்-25

நைஜீரியா நாட்டின் தலைநகர் மகுர்டியில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பலர் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 பாதிரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts