நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

                நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நசரவா மாகாணத்தின் தலைநகர் லபியாவில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை கிடங்கில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் என 18 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும்,பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்த மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நைஜீரிய செனட் அதிபர் புகோலா சராகி, இது ஒரு எதிர்பாராத கொடூரமான நிகழ்வு என தெரிவித்துள்ளார். நைஜீரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான எரிவாயு கிடங்குகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத்தால் அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் விபத்துகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related Posts