நோட்டாவிற்கு வாக்களிப்பது பா.ஜ.க அரசை அகற்றிட உதவாது: ரவீந்திரநாத் 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை என்பது கேள்விக் குறியாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். ,

நீட் நுழைவுத் தேர்வு தொடரும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  உறுதிபட கூறியுள்ளார் எனவும் இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பாதுக்காக்க அதிமுக  அரசும் தவறிவிட்டதாக அவர் சாடினார்.  . இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தை  பா.ஜ.க அரசுகொண்டு வருவது  கல்வியையும், மருத்துவ சேவையையும் கார்ப்பரேட்  மற்றும் காவி மயமாக்கும் நோக்கத்தை கொண்டது என அவர் குறிப்பிட்டார் .

நோட்டாவிற்கு வாக்களிப்பது பா.ஜ.க அரசை அகற்றிட உதவாது எனவும் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை,தமிழக வாக்காளர்கள்  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts