நோபால் விவகாரத்தில் விதிகளை மீறியதால் தோனிக்கு 50 சதவீத அபராதம்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டத்தின் கடைசி ஓவரில் அம்பயர் நோபால் சிக்னல் காண்பித்து பின் இல்லை என்று மறுத்துவிட்டார்.

இதையடுத்து ஜடேஜா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, மைதானத்துக்கு வெளியேயிருந்த தோனியும் திடீரென உள்ளே நுழைந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் நோபால் இல்லை என்பதன் அடிப்படையிலேயே ஆட்டம் தொடர்ந்தது. தோனியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், அது ஐபிஎல் விதிமீறல் என்பதால் அவரது ஒரு ஆட்டத்திற்கான சம்பளத்தில் இருந்து 50% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts