பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என கூறினார். தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருவதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts