பசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


பசுமை பட்டாசுகள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிதாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  பசுமை பட்டாசுகளை பொட்டாசியம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை மார்ச் 12 ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையின் நகலை உற்பத்தியாளர்கள் மற்றும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என அந்த  உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு  மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து. அப்போது பசுமை பட்டாசு என்றால் என்ன என்று விளக்கவும்,வடமாநிலங்களில் பயிர் அறுவடை செய்யும் சமயங்களில் ஏற்படும் மாசு பற்றி அறிக்கை அளிக்கவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் வானிலை மையத்திற்குநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts