பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் பால் உற்பத்தியாளர் நல சங்கம் கோரிக்கை

பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பால் 50 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக  அரசுக்கு பால் உற்பத்தியாளர் நல சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

 பால் உற்பத்தியாளர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்,  இதையொட்டி முதல்வரை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து  நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியசங்க நிர்வாகிகள்,  2014-ஆம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தனர். 27 ரூபாயாக உள்ள பசும்பால் கொள்முதல் விலையை 40ரூபாயாகவும் 29 ரூபாயாக உள்ள எருமைப்பால் கொள்முதல் விலையை 50 ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர்கள்  கூறினர். குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்குவதைப் போல பால் வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்கள் பெறும் பாலுக்கு லிட்டர் அடிப்படையில் ஊக்கவிலை, பாலில் கொழுப்புச்சத்து மற்றும்  இதர சத்துகள் தரம் அறியும் வசதி ஆகியவை தொடர்பான கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்ததாக, அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts