பஞ்சம் அல்லது யுத்தம் வந்தால் தான் உபரி நிதி வாங்க வேண்டும்

ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பா.ஜ.க. அரசைப் போன்று, காங்கிரஸ் அரசும் ரிசர்வ் வங்கி உபரி நிதியை பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார். பஞ்சம் அல்லது யுத்தம் வந்தால் தான் உபரி நிதி வாங்க வேண்டும்,  அன்றாட செலவுக்கு உபரி நிதியை வாங்க கூடாது என்றார் அவர்.

ப.சிதம்பரம் வழக்கில் சி.பி.ஐ. வழக்கறிஞர், சிதம்பரம் அதிபுத்திசாலி என்று கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் தங்களை அதிபுத்திசாலியாக்கி கொண்டு கைது செய்திருந்தால் நன்றாக இருந்திருகும் எனவும் கே. எஸ். அழகிரி கூறினார்.

Related Posts