பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

Related Posts