பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

பெங்களூரு-பஞ்சாப் இடையேயான லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. முதலில்  டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.  அதிரடியாக ஆடிய  டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களும், ஸ்டோய்னிஸ் 46 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஷமி, எம்.அஸ்வின், ஆர்.அஸ்வின், வில்ஜியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. . இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts