படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். இந்நிலையில், தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.. அதிகளவில் பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மாயமான நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடும் பணி நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Posts