படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

                கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம்  சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தற்போது மீட்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே 136 பேர் உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதையடுத்து  படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நான்கு நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

Related Posts