படம் ஓட வேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அதிமுகவை விமர்சிக்கிறார்

தனது படம் ஓட வேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அதிமுகவை விமர்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என சிலர் நினைப்பதாக கூறினார். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், படம் ஓட வேண்டும் என்பதற்காக தங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 37 ஆவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.  ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 500 கோடி வர வேண்டி உள்ளதாகவும்,  தமிழகத்தில் 8 புள்ளி 17 சதவீதம் அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts