பட்டக் காடுகளில் அனுமதியின்றி தீ வைப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:வனஆர்வலர்கள் கோரிக்கை

கொடைக்கானலில் பருவ மழை பொய்த்ததால் பட்டா காடு மற்றும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து சருகாகி உள்ளன. இந்நிலையில் பட்டா காடுகளில் உள்ள வேளாண் கழிவுகளை  அகற்ற வைக்கப்படும் தீ  வனப்பகுதிக்கும் வேகமாக பரவுவதால் அங்குள்ள மரங்கள் பற்றி எரிகின்றன.  அதனை  அணைக்க முடியாமல் வனத்துறையினர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் மேலும் இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பச்சை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும். பட்டா காடுகளில் தீ  வைப்பதற்கு முன்பு வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும். சிலர் அனுமதியின்றி தீ வைப்பதால் வனப்பகுதி மட்டும் அல்லாமல் விளை நிலங்களுக்கு பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts