பட்டாசுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

                பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு மத்திய அரசும் எதிர்ப்புத் தெரிவித்தது.

                மனுதாரர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், மத்திய அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. பட்டாசுகள் விற்பனைக்கு டெல்லியில் விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், பட்டாசுகள் விற்பனைக்கும், பட்டாசுகளை வெடிப்பதற்கும் நேர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ விற்கவோ அனுமதிகக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பதற்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Posts