பட்டா கத்தியால் கேக் வெட்டி , புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று பேர் கைது

கோவை சரவணம்பட்டி அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி , புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜுலை மாதம்  சூர்யா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி, அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக 3 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு SEITHU  விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கனி அமுதன், சூரிய மகேஷ்வரன், ராஜ ரத்தினம் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 கத்திகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே, இந்த வழக்கில் சுந்தரம், சதீஷ்குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது கனி அமுதனும் கைது செசய்யப்பட்டுள்ளார்.

Related Posts