பணம்,அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் 

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறிய வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ், பிரமாணப்பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்நிலையில்,  தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் கூறியது குறித்து  எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மதியம் 2 மணிக்கு  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருவதாகவும்,  இது தொடர்பாக கடுமையான முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.வசதி படைத்தவர்களும், அதிகாரம் மிக்கவர்களும் நெருப்புடன் விளையாடுவதாகவும், . நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் கூறினர்.. அவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் எனவும், பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள்எச்சரித்தனர்

 

Related Posts