பணியிடங்களை குறைப்பதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் தொகையில் நவீன ஆயுதங்கள்

ராணுவத்தில் பணியிடங்களை குறைப்பதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் தொகையில் நவீன ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

           மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட 12 புள்ளி 8 லட்சம் கோடியில், 83 சதவீதம் தினசரி செலவுக்கும், வீரர்களின் ஊதியத்திற்கும் மட்டும் செலவாகிறது. இது தவிர ஓய்வூதியத்திற்கு தனியாக பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 17 சதவீத மட்டும் ஆயுதங்கள் பராமரிக்கவும், ராணுவத்தை நவீனபடுத்தவும் செலவிடப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என ராணுவம் கருதுகிறது. இதனால் 1 புள்ளி 5 லட்சம் பணியிடங்களை குறைத்தால், 5 ஆயிரம் கோடி முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படும் எனவும், இதன் மூலம் ஆயுதங்களை பராமரிக்கவும், புதியஆயுதங்கள் வாங்கவும் முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Related Posts