பண்டிகை சமயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஊடுருவு

இந்தியாவில் பண்டிகை சமயங்களில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 5 இடங்கள் வழியாக 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது. முன்னெப்போதும் இருந்ததை விட தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்திய எல்லைக்குள் ஊடுருவ 500  தீவிரவாதிகளை பாகிஸ்தான் தயார்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் உளவுத்துறை இந்த எச்சரிக்கையை  வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts