பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது :  அமைச்சர் ஜெயக்குமார் 

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது:  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த அவர், எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5 சதவீத வரியை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்,  287 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இன்னும் 69 பொருட்களுக்கு வரி குறைப்பது தொடர்பாக வரும் கூட்டங்களில் வலியுறுத்தப்படும் என்று அவர் கூறினார். 12ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியின் தொன்மையை  குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது  என்றும் அவர் வலியுறுத்தினார்.  முந்தைய காலங்களில் ‘தனக்கும்கூட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும்  அதற்காக அழுதேனா?  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Posts