பதவி விலகியதற்காக தஹில் ரமாணியை  பாராட்டு

குஜராத் கலவரத்தில் பாஜகவினருக்கு தண்டனை கொடுத்த காரணத்திற்காகவே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் பதவி விலகியதற்காக தஹில் ரமாணியை  பாராட்டுவதாக அவர் கூறினார்.

சீனாவின் துயரம் மஞ்சள் நதி என்பது போல், இந்தியாவின் துயரம் கடந்த 5 ஆண்டுகாலமாக தொடரும் பாஜக ஆட்சி என அவர் விமர்சித்தார். தற்போது இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்ற சுனாமி வீசிக்கொண்டிருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

Related Posts