பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 94 புள்ளி 5 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 94 புள்ளி 5 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை : மே-23

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன்  வெளியிட்டார். இந்த ஆண்டு மாணவர்கள் 94.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3.9 சதவீதம் அதிகமாக உள்ளது. 98.5% தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 98.36 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீதமும் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் 28ஆம் தேதி மறு தேர்வு எழுதலாம் என்று தெரிவித்தார். மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க விடுத்த செங்கோட்டையன், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Posts