பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார்

 

 

பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார்.   

சென்னை, ஏப்ரல்-20 

நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கிய அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய எஸ்.வி.சேகரின் கருத்துக்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்.வி சேகரை கண்டித்து சென்னையில் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, எஸ்.வி.சேகருக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Posts