பந்து தாக்கி உயிரிழந்த பிலிப் ஹியூஸ் நினைவலைகள்

பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு வீரர்களும் டிவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சிட்னியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நிலைகுலைந்து போயினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அதிர்ச்சியில் உறைந்து போன ஆஸ்திரேலிய ரசிகர்கள், அதன் பின் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், இன்றுடன் பிலிப் ஹியூஸ் இறந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. பிலிப் ஹியூஸ் இறந்த நாளான இன்று அவருக்கு பல்வேறு வீரர்களும் இரங்கல்களை நினைவுபடுத்தி வருகின்றனர்.

Related Posts