பனிமய மாதா பேராலயத்தின் நற்கருணை ஆசிர் பவனி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் நற்கருணை ஆசிர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 437ஆம்ஆண்டு பெருவிழா கடந்த  26ம்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்விய நற்கருணை பவனி விழா  மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருயாத்திரை திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  இரவில்  தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற திவ்விய நற்கருணை பவனி நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts