பன்றிக்காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ராதாகிருஷ்ணன்

     சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா உள்ளிட்டவை பரவாமல் தடுக்கவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

                இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருடன் மேற்கொண்ட ஆலோசனையின்படி, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வட்டாரம் மற்றும் கிராம அளவில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, காய்ச்சலுடன் யார் அனுமதிக்கப்பட்டாலும், உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது

Related Posts