பன்றி காய்ச்சல் என்ற பெயரில் வரும் பன்றி என்ற வார்த்தையை நீக்க ஆலோசனை

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பன்றிக் காயச்சல் என்பது  பன்றியால் ஏற்படுவதில்லை  என்று சுகாதார துறை தெளிவுப்படுத்தி இருப்பதாகவும், பன்றி காய்ச்சல் என்ற பெயரால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வெண்பன்றி உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும்   குறிப்பிட்டார். மேலும் பன்றி காய்ச்சல் என்ற பெயரில் உள்ள பன்றி என்ற வார்த்தையை நீக்க உள்ளாட்சித் துறை அமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் முதல்வரைகூட  சந்திக்கதிட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் நடைபெறும் வெண்பன்றி தொடர்பான கண்காட்சியில் பண்ணையாளர்களுக்கு வெண்பன்றி வளர்ப்பு தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படுவதாக அவர்தெரிவித்தார்.

Related Posts