பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்து:தம்பிதுரை

பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடுஇருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கல்லம்பட்டி அம்மாபட்டி, கரடிப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருப்பதாகவும், பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறினார். மோடி அரசு, ராணுவத்திற்கு முழு அதிகாரம் கொடுத்ததை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்தபயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts