பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா ?

பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதற்கு பதில் அளித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசினார். அப்போது,  ஐநா சபையால் பயங்கரவாதியாக  அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அணு ஆயுத போர் வெடிக்கும் என இம்ரான்கான் மிரட்டுவது சிறந்த நிர்வாகத்துக்கான தகுதி இல்லை என்றும் சாடினார்.  ஐ.நா பார்வையாளர்களை அழைத்து பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை இம்ரான் கான் நிரூபிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ஐ.நா பட்டியிலிட்டுள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளிப்பதாகவும் சாடினார்.  பயங்கரவாத அமைப்புகளின் புகழிடமாக பாகிஸ்தான் இருப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது.

Related Posts