பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புப் படையினர் அனுமதி பெற வேண்டுமா:  பிரதமர்  மோடி கேள்வி

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் மற்றும் தேவ்ரியா ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதி என்று தெரிவித்தார். தேர்தலில் மக்கள் செயல்படக் கூடிய மற்றும் நேர்மையான அரசுக்கே வாக்களித்துள்ளதாக அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் பதவி வகித்த காலத்தைக் காட்டிலும், குஜராத் முதல்வராக அதிக காலம் தான் பதவி வகித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தன் மீது எந்த ஊழல் கறையும் கிடையாது என்று கூறினார்.

தஎனது பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தானோ அல்லது தனது குடும்பமோ துஷ்பிரயோகம் செய்தது கிடையாது என்று கூறிய அவர், ஏழை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் நலன்களுக்காகவுமே பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புப் படையினர் அனுமதி பெற வேண்டுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பினார்.

Related Posts