பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது:உச்சநீதிமன்றம் அதிரடிஅறிவுப்பு

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பராமரிப்பு பணிக்காக ஆலையை அனுமதிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில வேதாந்தா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது வாதிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து ஆலையின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக தமிழக அரசு திறக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts