பருவமழை தொடங்கவுள்ளதால் பேரிடர் மேலாண்மை துறையினர் தயார்

வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தென் மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்வது குறித்தும், இடர்பாடுகளை சமாளிப்பது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி. உதயக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். வெள்ளநீர் வடிகால்கள் அமைப்பது, ஆபத்து காலங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொதுமக்களை தங்கவைப்பது, பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்டவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Posts