பறவைகள் மோதியதால் இயந்திரக் கோளாறு : அதிர்ஷ்வசமாக உயிர் தப்பிய பயணிகள்

ரஷ்யாவில் வானில் பறந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக வயல் வெளியில் தரையிறக்கப்பட்டதால், அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.

ரஷ்யாவில் பறவைகள் மோதியதால் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட பயணிகள் விமானம், மக்காச்சோள தோட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால், 233 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுவோஸ்கி விமான நிலையத்திலிருந்து, யுரல் ஏர்லைன்ஸ் விமானம் 233 பயணிகளுடன் சிம்ஃபெரோபோல் நகருக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மீது, பறவைகள் மோதின. இதனால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, சற்றும் தாமதிக்காமல், விமானத்தை மக்காச் சோளம் பயிரிடப்பட்ட தோட்டத்தில் இறக்கினார். இதில் 27 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட போதும், விமானியின் சாதுர்யத்தால் 233 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சாதுர்யமாக செயல்பட்ட விமானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Posts