பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கை போரின் போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

      இலங்கையில் உள் நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழர்களின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts