பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 3 பேர் தொடர்ந்த வழக்கில், யிரிழந்தோரின் உடல்களை வரும் 30ம் தேதி வரை பதப்படுத்தி பாதுகாத்து வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவில் மாற்றங்கள் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 30-ம் தேதி பலியானவர்களின் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Related Posts