பல்கலைக்கழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை : பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியை துணைவேந்தர் சூரப்பா தொடக்கி வைத்தார். கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை தொடங்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகம், அதன் நான்கு பிரிவுகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்ஐடி மற்றும் அதன் 13 உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றார்.

Related Posts