பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை

சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ராணுவ அதிகாரியான பிரவீன் குமார். இவர் அப்பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இன்று காலை அவரது வீட்டுக்கு சென்ற மற்றொரு ராணுவ அதிகாரியான ஜக்ஸிர் என்பவர், பிரவீன் குமாரை சுட்டுக் கொலை செய்துள்ளார். உடனடியாக தானும் சுட்டுக்கொண்டு ஜக்ஸிர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு வருவது குறித்து பிரவீன் குமாருக்கும், ஜக்ஸிருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த ஜக்ஸிர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts