பல்லாவரம் அருகே சாலை விபத்தில் துப்புரவு தொழிலாளர் பரிதாபமாக உயிரிழப்பு

பல்லாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் துப்புரவு தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த அனாகபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மதியழகி. இவர் பம்மல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குப்பைகளை  வாகனத்தில் சேகரித்து காமராஜபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு சென்றார். அப்போது அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகனம் வேகமாக திரும்பியதில் மதியழகி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை  கைப்பற்றி  பிரேத  பரிசோதனைக்காக  குரோம்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Posts