பல ஆட்டங்களில் தோல்வி அடைந்ததற்கு பவர் பிளேயில் சிறப்பாக செயல்படாததே காரணம்:  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் காப்டன்  அஸ்வின் 

மொகாலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12 புள்ளியுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடித்து வருகிறது. 8-வது தோல்வியை தழுவிய. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த ஆடுகளத்தில் நிர்ணயித்த 184 ரன் இலக்கு போதுமானதுதான் என்று கருதுவதாகவும், . ஏனென்றால் இதே மைதானத்தில் இதற்கு முன்பு 175-180 ரன்கள் வரை எடுத்து வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். கொல்கத்தா அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் உஸ்மான் ஹில் கடைசிவரை நின்று அபாரமாக ஆடியதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் போட்டித் தொடரில் பல ஆட்டங்களில் தோற்றதற்கு பவர் பிளேயில் சிறப்பாக செயல்படாததே காரணம் என்ற அஸ்வின், பவர் பிளே ஓவர்களில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் தாங்கள்  கண்டிப்பாக நன்றாக செயல்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts