பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து, புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து, புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம், சமீபத்தில் கஸ்தூரி ரங்கன் குழு அளித்தது. மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் கற்பிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்தும் அம்சங்கள், புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts