பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-27

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது, ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதேபோல், திமுக உறுப்பினர் காளிமுத்து தனது தொகுதியில் புதிய கட்டடம் கட்டித்தரப்படுமா  என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது போல், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் தொகுதியாக இருந்தாலும், அதனை தங்கள் தொகுதியாக கருதி அரசு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

Related Posts