பள்ளி கட்டிடத்தை  ரயில் போன்று தத்ரூபமாக வடிவமைத்து, வண்ணமிட்டுள்ளது மாணவர்களிடையே வரவேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மேல்நிலை பள்ளி கட்டிடத்தை  ரயில் போன்று தத்ரூபமாக வடிவமைத்து, வண்ணமிட்டுள்ளது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பள்ளிக்கு education express என்று பெயரிடப்பட்டுள்ளது. வகுப்பறைகள், பயணிகள் அறையை போன்றும், தலைமை ஆசிரியர் அறை, ரயில் இன்ஜின் அறை போன்றும், பள்ளி வராண்டா, ரயில் நடைமேடை போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தப் பள்ளியை மாற்றியமைத்த பின்பு, பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு தினமும் வர வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நவீன உத்தியை புகுத்தியதாக தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

Related Posts