பழனி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

 

 

பழனி அருகே நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோடு பகுதியை சேர்ந்த சசி தனது மனைவி , பேரன்கள் மற்றும் உறவினர் ஆகியோருடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றார். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு அவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி என்ற இடத்தில் எதிரே வந்த  பழைய இரும்பு லோடு லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து லாரியை ஓட்டிவந்த அய்யப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்,

Related Posts