பழனி முருகன் கோயில் ஐஐடி பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழு  ஆய்வு

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக,  ஐஐடி பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழு  ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் : மே-12

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உள்ள 200 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை செய்ததில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த சிலையைஆய்வு செய்ததில், உற்சவர் சிலையில், தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் விகிதாச்சாரங்களில் முறைகேடு நடந்திருப்பதும், சிலை செய்ததில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, அப்போதைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜாவையும், ஏற்கனவே, சிலைமோசடி வழக்கில் சிக்கிய ஸ்தபதி முத்தையாவையும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் முன்னிலையில், ஐஐடி பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழு  ஆய்வு செய்தது.

Related Posts