பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் : மே-14

பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 2004 ம் ஆண்டு ஐம்பொன்னாலான முருகன் சிலை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த  குற்றச்சாட்டின் படி அப்போதைய பழனி கோவில் இணை ஆணையர் கேகே ராஜா மற்றும் இந்து அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அதன் தொடர்ச்சியாகசிலை தடுப்பு காவல்துறையினர் கடந்த 2நாட்களாக பழனியில் முகாமிட்டுஉலோகவியல் பேராசிரியர் முருகையன் தலைமையில் முருகன் சிலை மற்றும் கோவிலில் உள்ள மற்ற ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஐம்பொன் சிலை முறைகேட்டிற்கு உதவி செய்ததாக அப்போதைய பழனி கோவில் உதவி ஆணையர் புகழேந்திதலைமை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகிய பேரை கைது செய்தனர்.

Related Posts